உயிரான உறவு
செல்வி நித்தியானந்தன்
உயிரான உறவு
உயிருக்குள் கருவாகி
உதிரத்துள் சுமையாகி
உவகையில் இணைவாகி
உள்ளமதில் கொள்ளை
கொண்ட தாய்அவரே
உலகைவிட்டு ஆறு
ஆண்டு கடந்ததே
உம்நினைவு எம்மை
விட்டு அகலாதே
உயிரான உறவுகள்
உதிரப் பிணைப்புகள்
உரிமை உணர்வுகள்
உசிரை எடுக்கினம்
உயிரான உறவுதனை
பயிரான நினைவுகளை
காதல் நினைவுடனே
காக்கும் எம்உயிரே
கருவான உறவுடனே
கண்ணின் மணிபோல
காலமெல்லாம் காக்கும்
காத்திடும் உறவுகளின்
நினைவுடனே நானும்
செல்வி நித்தியானந்தன்
Author: arunwebhosting@gmail.com
Related Post
உயிரான உயிரே
ராணி சம்பந்தர் பயிருக்கு மண் சொந்தம் உயிருக்குக் கண்ணான கணவன் மனைவி பந்தம் மெய்யான இன்பம் வேலி பொய்யான துன்பம் [...]
“புதையுண்ட மலையகம்”
நேவிஸ் பிலிப் கவி இல(562) தெரிகின்ற தூரமும் தொடுகின்ற வானமும் பணிந்து வந்த அந்த வானத்தை காண விரைந்த என்மனம் [...]
உயிரான உறவு
நகுலா சிவநாதன் உயிரான உறவு உயிரான காதல் உளத்துக்காதல் பயிராக வளரும் பண்பாட்டுக்காதல் நிலவாக உலவும் நித்தியக் காதல் நீண்டு [...]
