புரிய முயலாதே 1
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும் இன்று நிகழ்கின்றது
சுகம் வந்தால் நிரந்தரமென நம்பி
துயரம் நுழைகையில் ஏனென வெம்பி
இரண்டுங்கெட்டான் நிலையில் நாட்கள்
பிடிக்கமுடியாமல் நீராக வழிகின்றன
வந்த பாதை தெரியாத போது
போகும் பாதை தெரிவதும்தான் ஏது
முடிவில்லா ஒரு நீண்ட பயணமாக
விழுந்தாலும் எழுந்து நடக்க
சொல்லித் தருகுது காலம்
ஜெயம்
Author: arunwebhosting@gmail.com
Related Post
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை நெஞ்சினிலே என்றும் வெள்ளைமனசு [...]
அகத்தினில் இன்பமே
செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே [...]
உயிரான உறவு…..
இரா.விஜயகௌரி வைகறைகள் உயிர்ப்பெழுதும் வனப்பு மிக்க விடியலுக்கு தினமெழுதும் மொழிப்புனலாய் கனவெழுதும் தேவதை இவள் தன்வலியை தான் மறப்பாள் உதிரத்துள் [...]
