“புதையுண்ட மலையகம்”
நேவிஸ் பிலிப் கவி இல(562)
தெரிகின்ற தூரமும் தொடுகின்ற வானமும்
பணிந்து வந்த அந்த வானத்தை
காண விரைந்த என்மனம்
கசிந்து கரைகின்றது
பசுமைச் சாயம் கவிழ்ந்த முகடுகள்
கூடை சுமந்து குனிந்த முக்காட்டுப் பெண்கள்
வளைந்து நெளிந்த பாதைகளில்
ஊர்ந்து விரைகின்ற வாகனங்கள்
பச்சை வண்ணப் பர்வதங்கள்
இச்சையூட்டும் நெடு மரங்கள்
பண்ணையெங்கும் பசுவினங்கள்
பஞ்சு போல புல் நிலங்கள்
அழகழகாய் மலரினங்கள்
அடுக்கடுக்காய் விளை நிலங்கள்
துள்ளியோடும் மான்கள் போல
பள்ளி செல்லும் மாணவர்கள்
பனித் துளி மேல் தலை முட்ட
களை கட்டும் திசை எட்டும்
எழில் கூட்டும் மலையகத்தை
உறைந்த குளிரில்
தேடியும் எங்கும் காணலையே
நன்றி********
Author: arunwebhosting@gmail.com
Related Post
கலந்து விட்ட உண்மைகள்
ராணி சம்பந்தர் பாதியைப் பாதியான மீதி தேடுது பிறப்பிலும் இறப்புச் சேதி கூடுது பிறந்தது ஒன்று இரண்டு ஆகுதே அறக்கப்பறக்க [...]
நெல்லு வயல் காடு
வயிதா முகமட் நெல்லு வயல் காடு நீஎனக்கு சோறு தங்கம் வாழ்வுக்கு வறுமை தீர்து வயிற்றுக்கு பசிதீர்து காற்றோடு கதைபேசி [...]
அமைதியின் முகவடிவமே
மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் [...]
