மாசி திங்கள்
வியாழன் கவி 2292
மாசி திங்கள்..
மாசித் திங்கள் மனதோரம் சாரல்
மனதை வருடும் நாட்களின் சேரல்
குறுகிய காலத்தின் மென்மைவருடல்
அறுதியாய் அழகாய் பிறந்ததே சீராம்..
சிவன் இராத்திரி பக்தியின் இராகம்
சிறப்பொடு விழி திறந்தே வாங்கும் வரம்
கரங்களில் நம்பிக்கை கூடும் வாரம்
குறையேது பன்னிரண்டில் பசும் ஈரம்..
தையுக்கு அடுத்த செல்ல மங்கை
மனதை தைத்து நகரும் சிந்தை
மூசிப் பெய்யும் பனியின் விந்தை
முனகாது பொழியும் பூம்பனி மகிமை..
சிவதர்சனி இராகவன்
19/2/2026
Author: arunwebhosting@gmail.com
Related Post
” சுதந்திரம் “
ரஜனி அன்ரன் (B.A) ” சுதந்திரம் ” 05.02.2026 சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை அதுவே ஒவ்வொரு மனிதனதும் பிறப்புரிமை [...]
“அன்பின் வழியினிலே”
நேவிஸ் பிலிப் கவி இல(563) அன்பின் வழியில் நடந்திட்டால் ஆயிரம் நன்மை கூடி வரும் இறையருள் ஒன்றே நாடி நின்றால் [...]
புரிய முயலாதே 1
நேற்று என்பது நினைவோடு மட்டும் நாளை என்பது கற்பனையாக சொட்டும் உண்மை மட்டும் இன்று நிகழ்கின்றது சுகம் வந்தால் நிரந்தரமென [...]
