பாடுபடு!
நகுலா சிவநாதன்
பாடுபடு!
அன்பும் பண்பும் குணமாகும்
அதுவே அகத்தின் அழகாகும்
இன்பம் என்றும் இதமாகும்
இதுவே மகிழ்வின் அடையாளம்
துன்பம் என்றும் அகற்றிவிடு
துணிவை என்றும் வரமாக்கு
வென்று வாழ்வைச் செழிப்பாக்கு
வெற்றி என்றும் உனதாகும்
காடும் மேடும் வளமாக்கு
காசை கொடுத்து பயிராக்கு
வீடும் நாடும் விளைவித்து
விதையைப் போட்டு உரமாக்கு
தேடும் தேடல் விதையாக்கு!
தேட்டம் என்றும் வரமாக்கு
ஓடும் முயற்சி வென்றிடவே
ஓயா அலையாய்ப் பாடுபடு!
நகுலா சிவநாதன் 1841
Author: arunwebhosting@gmail.com
Related Post
உயிரான உறவு
இல 77 உயிரான உறவு நாம் பிறந்ததிலிருந்து முதல் முதல் வந்த உயிரான உறவு எமது பெற்றோர்களே அன்பும் பாதுகாப்பும் [...]
உனை உணராதிருக்கிறாய்
இரா.விஜயகௌரி மெல்லப் பேசும் சின்ன வரிகளுள் சிதறாமல் பதறாமல் மெல்ல உந்தனை வழுவாத வாழ்வுப் பாதையில் நழுவாமல் செல்வதற்காய் அழைக்கிறேன் [...]
முடிவில்லாத் தொடக்கம் 84
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 05-02-2026 வாழ்வு முடிவில்லாத் தொடர்ச்சி வலிகளும் இன்பமும் வளைந்து நெளிந்து வட்டமிடும் சுழற்சி முடிந்து விட்டதென [...]
