உயிரான உறவே…….
ரஜனி அன்ரன் ( B.A) உயிரான உறவே….. 12.02.2026
அறிமுகமில்லாத் தேடலின் ஆத்மார்த்தம்
இசையோடுகலவி இசைவால் உயிராகிய உறவே
உணர்வினில் கலந்தஉயிரே என்உயிரின் துடிப்பு நீயே
நிழலாய்வந்து நிலைகொண்டு
நிஜமாய்வாழும் என்பாதி நீயே !
எங்கோபிறந்து எங்கோவளர்ந்து இணையாகிய
ஏதுமறியாச் சொந்தமிது ஏழேழுஜென்மப் பந்தமிது
உன்னோடுவாழும் ஒவ்வொரு நொடியும்
ஆத்மபலத்தை வாழ்வின் பந்தத்தை
ஆயுள்கடந்தும் எடுத்துச் செல்லுமே
வாழ்வியல் பயணத்தில் வலிகள்வந்தாலும்
உன்கைபிடித்து நடக்கையில் வசந்தமாகிறது வாழ்வு !
முத்துவிழாப் பந்தமிது முத்திரைபதித்த விந்தையிது
முத்துக்கள் மூன்றோடும் முத்தாய்ப்பான வாழ்விது
சட்டென்று கோபம்வந்தாலும்
பட்டென்று மறந்துவிடும் பாசக்காரன்நீ
என்னுயிரே மண்வாசம் மழைக்குச்சொந்தம்
உன்சுவாசம் எனக்கே சொந்தம் !
Author: ரஜனி அன்ரன்
Related Post
மாசி திங்கள்
வியாழன் கவி 2292 மாசி திங்கள்.. மாசித் திங்கள் மனதோரம் சாரல் மனதை வருடும் நாட்களின் சேரல் குறுகிய காலத்தின் [...]
புரிய முயலாதே 1
நேற்று என்பது நினைவோடு மட்டும் நாளை என்பது கற்பனையாக சொட்டும் உண்மை மட்டும் இன்று நிகழ்கின்றது சுகம் வந்தால் நிரந்தரமென [...]
பூம்பனி கொட்டுது
நகுலா சிவநாதன் பூம்பனி கொட்டுது பூம்பனி கொட்டுது புழுதியில் வீழ்குது தேம்பியே அழுகுது வானம் வானமும் கறுக்குது வையகம் பொழியுது [...]
