உனை உணராதிருக்கிறாய்
இரா.விஜயகௌரி
மெல்லப் பேசும் சின்ன வரிகளுள்
சிதறாமல் பதறாமல் மெல்ல உந்தனை
வழுவாத வாழ்வுப் பாதையில் நழுவாமல்
செல்வதற்காய் அழைக்கிறேன் புரிவாயா
என் மகளாய் உந்தனை நோக்கி
மயங்கி நிற்கும் சிந்தனைப் பொறி விலக்கி
கரைந்து போகும்கனவுத் திரை விடுத்து
கை கோர்த்து அழைக்கிறேன்
திடமாய் பலமாய் உன்பாதை நீ வகுத்து
வாழத்தெரிந்த வலிமை மிக்கவள் நீ
எங்கோ திசைமாறிப்போகிறாய் புரிகிறது
செவி மெல்லத்திருகி சொல்கிறேன் மகளே
உனை நீ உணராதிருக்கிறாய் -வெறும்
பசப்பு வார்த்தைகளுள் பட்டயம் தேடுகிறாய்
விழித்தெழும் வேளை சிலிர்ப்பு வலைக்குள்
சிக்கித்தவித்து முடியாமல் தவித்திடுவாய்
உனை உணர்ந்தெழு விழித்தெழு
அட உனைத்தான்அழைப்பது உனைத்தான்
Author: arunwebhosting@gmail.com
Related Post
உயிரான உறவு 86
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-02-2026 உயிரான உறவு என் தாயே உயிரெனக்கு தந்தவள் நீயே மூச்சாய் நின்று பேச்சு தந்தவளே-என் [...]
“உயிரான உறவே”
நேவிஸ் பிலிப் இல்(563) உயிரான உறவாக இறை என்பேனா மறை என்பேனா அன்னை என்பேனா தந்தை என்பேனா தாயுமானவன் என்பேனா [...]
அமைதியின் முகவடிவமே
மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் [...]
