அமைதியின் முகவடிவமே
மகிழ்ச்சியின் விளைவாக இது
உணர்வுகளை கடந்த
அறிவின் நிலை அது
வெளிப்புற நிகழ்வுகளால்
உருவாகாது
உள்ளார்ந்த தெளிவால்
பிறக்கிறது
அமைதியின் முகவடிவமே இது
இதை தெரிந்தவன்
முதிர்ந்த மனிதன்
தன்னை காத்துக் கொள்பவன்
இதை கொள்வான்
மனிதனை
உள்ளார்ந்து சிதையாமல்
காப்பது இது
இது மனிதனின் மாபெரும் ஆற்றல்
வாழ்க்கையை
ஏற்றுக்கொண்டவனின்
தீர்மானம்
தன் மனநிலை தன்வசம் கொண்டவனே இதை செய்வான்
இது ஒரு புரிதலின் சின்னம்
வாழ்க்கையிடம்
மனிதன் சொல்லும்
மௌனமான சம்மதம்
நம்பிக்கையற்ற தருணத்திலும்
வாழ்வை விடாத
உயிரின் பிடிவாதம்
இதை தெரிந்தவன் என்பதே
அவன் துன்பத்தை
ஆளத் தெரிந்தவன்
என்பதற்கான சாட்சி
ஜெயம்
05-02-2026
Author: arunwebhosting@gmail.com
Related Post
“புதையுண்ட மலையகம்”
நேவிஸ் பிலிப் கவி இல(562) தெரிகின்ற தூரமும் தொடுகின்ற வானமும் பணிந்து வந்த அந்த வானத்தை காண விரைந்த என்மனம் [...]
புரிய முயலாதே 2
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு வாழ்க்கை அதை புரிய முயலவில்லை ஆனால் அதன் ஆழத்துள் மூழ்கி வெளிவந்திருக்கின்றேன் அது அனுபவிக்க வேண்டிய ஒரு [...]
உயிரான உறவே-2153 ஜெயா நடேசன்
பத்து மாதங்கள் பத்திரமாய் சுமந்து குழந்தையின் முகத்தை பார்ப்பாள் பிரசவித்த வேதனையும் மறப்பாள் உதிரத்தை பாலாக்கி ஊட்டி மகிழ்வாள் மடியை [...]
