வானிலை நிபுணருக்கு வாழ்த்து
சக்தி சிறினிசங்கர்
அறுசீர் விருத்தம்
சீர் வரையறை: விளம் விளம் விளம்/ விளம் விளம் விளம்
அறிவியல் ஆர்வலர்
உலகினை
ஆள்பவர் அவரது சேவையில்
குறியது இருந்திடும் குறிப்புகள்
குறித்திடக் குவலயம் கேட்டிடும்
நெறிமுறை சொல்பவர் நிமிடமும்
நேரமும் சரியென உரைப்பவர்
செறிந்திடும் கல்வியும் ஞானமும்
சேர்ந்துதான் செப்புவர் வானிலை !
வானிலை மாறுதல் அறிந்தவர்
வாக்கினில் உண்மையை உரைப்பவர்
வானிலை நிபுணராய் வாழ்பவர்
வாழ்வினில் சேவையைச் செய்பவர்
மானிடர் காவலர் ஆனவர்
மாபெரும் உதவியாய் இருப்பவர்
தேனினைச் சொரிந்திடும் தீந்தமிழ்
தென்றலாய் வருடி வாழ்த்துகள்!
இன்று வானிலை அறிவியல் நிபுணர்கள் தினம் என்றமையால் கவிதை பிறந்தது.
நன்றி வணக்கம்
Author: arunwebhosting@gmail.com
Related Post
வாழ்வு வளம் பெற-2150 ஜெயா நடேச
எல்லோரும் நலம் பெற்று வாழவே எந்நாளும் இறைவன் விரும்புகிறார் ஏற்ற வழி செய்து பிறக்க வைத்தார் புவி போற்ற புது [...]
தீயநட்பு
இல 78 தலைப்பு= தீயநட்பு நம்மால் பயனுள்ள போது நட்பைக் காட்டியும் பயனில்லாத போது விலகி விடுவது இவ் நட்பே [...]
கலந்து விட்ட உண்மைகள்
ராணி சம்பந்தர் பாதியைப் பாதியான மீதி தேடுது பிறப்பிலும் இறப்புச் சேதி கூடுது பிறந்தது ஒன்று இரண்டு ஆகுதே அறக்கப்பறக்க [...]
