உனை உணராதிருக்கிறாய்
இரா.விஜயகௌரி
மெல்லப் பேசும் சின்ன வரிகளுள்
சிதறாமல் பதறாமல் மெல்ல உந்தனை
வழுவாத வாழ்வுப் பாதையில் நழுவாமல்
செல்வதற்காய் அழைக்கிறேன் புரிவாயா
என் மகளாய் உந்தனை நோக்கி
மயங்கி நிற்கும் சிந்தனைப் பொறி விலக்கி
கரைந்து போகும்கனவுத் திரை விடுத்து
கை கோர்த்து அழைக்கிறேன்
திடமாய் பலமாய் உன்பாதை நீ வகுத்து
வாழத்தெரிந்த வலிமை மிக்கவள் நீ
எங்கோ திசைமாறிப்போகிறாய் புரிகிறது
செவி மெல்லத்திருகி சொல்கிறேன் மகளே
உனை நீ உணராதிருக்கிறாய் -வெறும்
பசப்பு வார்த்தைகளுள் பட்டயம் தேடுகிறாய்
விழித்தெழும் வேளை சிலிர்ப்பு வலைக்குள்
சிக்கித்தவித்து முடியாமல் தவித்திடுவாய்
உனை உணர்ந்தெழு விழித்தெழு
அட உனைத்தான்அழைப்பது உனைத்தான்
Author: arunwebhosting@gmail.com
Related Post
” செம்மொழியாம் எம்தமிழ் “
ரஜனி அன்ரன் (B.A) ” செம்மொழியாம் எம்தமிழ் ” 19.02.2026 அன்னைத் தமிழே அருமருந்தே அமுதத் தமிழாய் மலர்ந்தவளே முன்னைத் [...]
வானிலை நிபுணருக்கு வாழ்த்து
சக்தி சிறினிசங்கர் அறுசீர் விருத்தம் சீர் வரையறை: விளம் விளம் விளம்/ விளம் விளம் விளம் அறிவியல் ஆர்வலர் உலகினை [...]
உயிரான உறவே…
வசந்தா ஜெகதீசன் உயிரான உறவே… வெற்றி மிகு வாழ்வில் வீறு கொள்ளும் சிந்தை பற்றியே படர்கின்ற பாதையின் செதுக்கல் பாசமுடன் [...]
