” செம்மொழியாம் எம்தமிழ் “
ரஜனி அன்ரன் (B.A) ” செம்மொழியாம் எம்தமிழ் ” 19.02.2026
அன்னைத் தமிழே அருமருந்தே
அமுதத் தமிழாய் மலர்ந்தவளே
முன்னைத் தவத்தின்பயனாக
கன்னித் தமிழாய் கனிந்தவளே
உன்னைப் போற்றிப் பணிகின்றேன்
உலகின் முதல்மொழி நீதானே !
வள்ளுவன் வழியில் வாழ்வியல்தமிழாய்
கம்பன் கணிப்பில் காவியத்தமிழாய்
பாரதி நடையில் புதுமைத்தமிழாய்
பாரதிதாசன் வழியில் புரட்சித்தமிழாய்
இளங்கோவின் இலக்கில் இலக்கியத்தமிழாய்
இரண்டறக் கலந்த செம்மொழியே நீவாழி !
அன்னைத்தமிழின் சிறப்பினை
அளவிட வார்த்தைகள் கிடையாதே
இளமை புதுமை தொன்மை மிகுந்த
இனிமைத் தமிழே – உனை
மூச்சாய் கொண்டோம் பேச்சாய் கொண்டோம்
எத்தனை மொழிகள் தான்இருந்தாலும்
செம்மொழியாம் உந்தனுக்கு ஈடாகுமா ?
Author: ரஜனி அன்ரன்
Related Post
தீயநட்பு
இல 78 தலைப்பு= தீயநட்பு நம்மால் பயனுள்ள போது நட்பைக் காட்டியும் பயனில்லாத போது விலகி விடுவது இவ் நட்பே [...]
அகத்தினில் இன்பமே
செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே [...]
தருவாய் தளிராய்…
வசந்தா ஜெகதீசன் தரணி தற்காத்து தருவாய் தளிர்க்கும் தனித்துவ நிமிர்வில் தன்னிலை தாங்கும் பருவ எழிலில் பண்பட்டு வாழும் தருவே [...]
