முடிவில்லாத் தொடக்கம் 84
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
05-02-2026
வாழ்வு முடிவில்லாத் தொடர்ச்சி
வலிகளும் இன்பமும்
வளைந்து நெளிந்து
வட்டமிடும் சுழற்சி
முடிந்து விட்டதென
மூடிவைத்த புத்தகத்தை
புதியதொரு தளிர்க்கரம்
புன்னகையோடு புரட்டுகிறது
அத்தியாயம் மாறலாம்
அனுபவம் கூடலாம்
முற்றுப்புள்ளி இடலாம்
மீண்டும் முகவுரை தொடரலாம்
இன்றைய துயரம்
நாளைய அனுபவம்
வாழ்வின் பொருளோ
முடிவில்லாத் தொடக்கம்.
Author: Jeba Sri
Related Post
உயிரான உறவே…….
ரஜனி அன்ரன் ( B.A) உயிரான உறவே….. 12.02.2026 அறிமுகமில்லாத் தேடலின் ஆத்மார்த்தம் இசையோடுகலவி இசைவால் உயிராகிய உறவே உணர்வினில் [...]
உயிரான உறவு..
வியாழன் கவி 2288 உயிரான உறவு.. உதிரத்தில் உணவூட்டி உணர்வுக்குள் அன்பேந்தி உலகுக்கு வழிகாட்டியவள் உயிரான உறவானாள்.. கருவினுக்கு காரணியாய் [...]
தருவாய் தளிராய்…
வசந்தா ஜெகதீசன் தரணி தற்காத்து தருவாய் தளிர்க்கும் தனித்துவ நிமிர்வில் தன்னிலை தாங்கும் பருவ எழிலில் பண்பட்டு வாழும் தருவே [...]
