தருவாய் தளிராய்…
வசந்தா ஜெகதீசன்
தரணி தற்காத்து தருவாய் தளிர்க்கும்
தனித்துவ நிமிர்வில் தன்னிலை தாங்கும்
பருவ எழிலில் பண்பட்டு வாழும்
தருவே புவியைத் தாங்கிடும் சக்தி
தருமே மழையை புவியீர்ப்பு சுழற்சி
தளிராய் இலையாய் சருகாய் உதிரும்
பருவச் சுழற்சியில் பயனை விதைக்கும்
எழிலில் நிறைக்கும் இயற்கைப் புவியை
மண்ணின் வளத்தை காத்திடும்
மகிமை
நிழலாய் நிறைக்கும் கனியாய் காயாய் கரிசனை பலவாய்
விறகாய் மரமாய் விதவிதமாகும் தளபாடப் பயனாய்
தருவின் கொடைகள் தரணிக்கு மகுடம்
தருமே பற்பல பாடங்கள் வாழ்வில்
ஏற்றே என்றும் ஒரு மரம் நாட்டு
எதிர்காலம் ஒளிரவழியினைச் சாற்று
வெட்டு மரத்தை வீழ்த்தும் முன்யோசி!கோடரிக்காம்பாய் வீழ்த்துதல்தவிர்ப்போம்.நன்றி
Author: arunwebhosting@gmail.com
Related Post
உயிரான உறவு..
வியாழன் கவி 2288 உயிரான உறவு.. உதிரத்தில் உணவூட்டி உணர்வுக்குள் அன்பேந்தி உலகுக்கு வழிகாட்டியவள் உயிரான உறவானாள்.. கருவினுக்கு காரணியாய் [...]
உயிர்மெய்யாய்….
வசந்தா ஜெகதீசன் உயிர்மெய்யாய்… மொழிக்கு முதலானது முழுமைக்கு நிகரானது உயிர்ப்பில் உலகானது உயிராமெய்யே வேரானது வாழ்வின் தடமானது வரலாற்று மொழியானது [...]
புரிய முயலாதே 2
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு வாழ்க்கை அதை புரிய முயலவில்லை ஆனால் அதன் ஆழத்துள் மூழ்கி வெளிவந்திருக்கின்றேன் அது அனுபவிக்க வேண்டிய ஒரு [...]
