உருமாறும் பனித்துளிகள்
ராணி சம்பந்தர்
இரவு பகல் ஓய்வின்றித்
தூவிய பனி முட்டைகள்
இலை உதிர்ந்த மொட்டை
மரங்களில் வட்டப் பூவால்
கொத்துக்கொத்தாக்கியது
மூடு பனியாலே உறைந்து
சில கிளையில் காதலன்
உதய சூரியன் வரவிற்காக
வெண்ணிற உடை உடுத்த
காதலியை வரவேற்கும் காதல்
மன்னன் சொட்டுச்சொட்டாகும்
பனினீர்க் கோர்வை மாலையாக
அணிந்திடக் காத்திருக்கும் சுகம்
வீசுங் காற்றில் பல கனவோடு
ஊஞ்சலாடி மகிழும் பனித்துளியோ
ஒரு நாள் வாழும் ஈசல் போல சில
மணித்துளியில் உருமாறிக்
கண்ணீர்த் துளிகளுடன்
கரைந்திடுமே கவலையுடன் .
Author: arunwebhosting@gmail.com
Related Post
புனித ரமலானே வ௫க
வஜிதா முகமட் புனித ரமலானே வ௫க இறை அ௫ளை அள்ளித்த௫ம் மாதம் இரவு பகல் படைத்தவனை போற்றி வணங்கியி௫க்கும் நேரம் [...]
ஒழுக்கம்
இல 76 தலைப்பு = ஒழுக்கம் ஒழுக்கம் உயிரை விட மேலானது ஒழுக்கம் இல்லாதவர் வாழ்க்கையில் நன்மைகளை காண முடியாது [...]
” செம்மொழியாம் எம்தமிழ் “
ரஜனி அன்ரன் (B.A) ” செம்மொழியாம் எம்தமிழ் ” 19.02.2026 அன்னைத் தமிழே அருமருந்தே அமுதத் தமிழாய் மலர்ந்தவளே முன்னைத் [...]
