உயிரான உறவே…….
ரஜனி அன்ரன் ( B.A) உயிரான உறவே….. 12.02.2026
அறிமுகமில்லாத் தேடலின் ஆத்மார்த்தம்
இசையோடுகலவி இசைவால் உயிராகிய உறவே
உணர்வினில் கலந்தஉயிரே என்உயிரின் துடிப்பு நீயே
நிழலாய்வந்து நிலைகொண்டு
நிஜமாய்வாழும் என்பாதி நீயே !
எங்கோபிறந்து எங்கோவளர்ந்து இணையாகிய
ஏதுமறியாச் சொந்தமிது ஏழேழுஜென்மப் பந்தமிது
உன்னோடுவாழும் ஒவ்வொரு நொடியும்
ஆத்மபலத்தை வாழ்வின் பந்தத்தை
ஆயுள்கடந்தும் எடுத்துச் செல்லுமே
வாழ்வியல் பயணத்தில் வலிகள்வந்தாலும்
உன்கைபிடித்து நடக்கையில் வசந்தமாகிறது வாழ்வு !
முத்துவிழாப் பந்தமிது முத்திரைபதித்த விந்தையிது
முத்துக்கள் மூன்றோடும் முத்தாய்ப்பான வாழ்விது
சட்டென்று கோபம்வந்தாலும்
பட்டென்று மறந்துவிடும் பாசக்காரன்நீ
என்னுயிரே மண்வாசம் மழைக்குச்சொந்தம்
உன்சுவாசம் எனக்கே சொந்தம் !
Author: ரஜனி அன்ரன்
Related Post
உயிரான உறவு..
வியாழன் கவி 2288 உயிரான உறவு.. உதிரத்தில் உணவூட்டி உணர்வுக்குள் அன்பேந்தி உலகுக்கு வழிகாட்டியவள் உயிரான உறவானாள்.. கருவினுக்கு காரணியாய் [...]
உயிரான உறவு
செல்வி நித்தியானந்தன் உயிரான உறவு உயிருக்குள் கருவாகி உதிரத்துள் சுமையாகி உவகையில் இணைவாகி உள்ளமதில் கொள்ளை கொண்ட தாய்அவரே உலகைவிட்டு [...]
உயிரான உயிரே
உயிரான உயிரே ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ நினைவிலே சிலையாக வைத்தேன் உன்னை நீங்காத உயிராய் உயிரானாய் நீயும் ஆருயிரே ஆனந்தப் பூங்காற்றின் ஓசையாய் [...]
