வாழ்வு வளம் பெற-2150 ஜெயா நடேச
எல்லோரும் நலம் பெற்று வாழவே
எந்நாளும் இறைவன் விரும்புகிறார்
ஏற்ற வழி செய்து பிறக்க வைத்தார்
புவி போற்ற புது வாழ்வு தந்தார்
வாழ்வில் சில பல துன்பம தந்தார்
தக்க தருணங்களில் கை கொடுத்தார்
நல் வழிகள் பல சொல்லி தந்தார்
துடிப்பாக துணிவாக தூய்மை அணிந்து
இறைவன் தந்த வாழ்வை வாழ்வாக்கி
வரமாக பெற்று பயனாக்கி வாழ்ந்தேன்
தனிமை என்ற நிலையினை உணராது
பிள்ளைகள் உறவுகள் பலமாக நின்றனர்
சுதந்திர வாழ்வில் பறந்து திரிய வைத்தார்
மலர்ந்துள்ள முகத்தை மகிழ்வாக்கினார்
தேவன் கரத்திலொரு பரிசாக தந்திட்டார்
நல் மனம் கொண்டு தமிழை வளர்த்திடுவோம்
புவி போற்ற புகழாரம் வேண்டி வாழ்ந்திடுவோம்
Author: arunwebhosting@gmail.com
Related Post
உனை உணராதிருக்கிறாய்
இரா.விஜயகௌரி மெல்லப் பேசும் சின்ன வரிகளுள் சிதறாமல் பதறாமல் மெல்ல உந்தனை வழுவாத வாழ்வுப் பாதையில் நழுவாமல் செல்வதற்காய் அழைக்கிறேன் [...]
உயிரான உறவே…….
ரஜனி அன்ரன் ( B.A) உயிரான உறவே….. 12.02.2026 அறிமுகமில்லாத் தேடலின் ஆத்மார்த்தம் இசையோடுகலவி இசைவால் உயிராகிய உறவே உணர்வினில் [...]
“அன்பின் வழியினிலே”
நேவிஸ் பிலிப் கவி இல(563) அன்பின் வழியில் நடந்திட்டால் ஆயிரம் நன்மை கூடி வரும் இறையருள் ஒன்றே நாடி நின்றால் [...]
