” செம்மொழியாம் எம்தமிழ் “
ரஜனி அன்ரன் (B.A) ” செம்மொழியாம் எம்தமிழ் ” 19.02.2026
அன்னைத் தமிழே அருமருந்தே
அமுதத் தமிழாய் மலர்ந்தவளே
முன்னைத் தவத்தின்பயனாக
கன்னித் தமிழாய் கனிந்தவளே
உன்னைப் போற்றிப் பணிகின்றேன்
உலகின் முதல்மொழி நீதானே !
வள்ளுவன் வழியில் வாழ்வியல்தமிழாய்
கம்பன் கணிப்பில் காவியத்தமிழாய்
பாரதி நடையில் புதுமைத்தமிழாய்
பாரதிதாசன் வழியில் புரட்சித்தமிழாய்
இளங்கோவின் இலக்கில் இலக்கியத்தமிழாய்
இரண்டறக் கலந்த செம்மொழியே நீவாழி !
அன்னைத்தமிழின் சிறப்பினை
அளவிட வார்த்தைகள் கிடையாதே
இளமை புதுமை தொன்மை மிகுந்த
இனிமைத் தமிழே – உனை
மூச்சாய் கொண்டோம் பேச்சாய் கொண்டோம்
எத்தனை மொழிகள் தான்இருந்தாலும்
செம்மொழியாம் உந்தனுக்கு ஈடாகுமா ?
Author: ரஜனி அன்ரன்
Related Post
உயிரான உறவு..
வியாழன் கவி 2288 உயிரான உறவு.. உதிரத்தில் உணவூட்டி உணர்வுக்குள் அன்பேந்தி உலகுக்கு வழிகாட்டியவள் உயிரான உறவானாள்.. கருவினுக்கு காரணியாய் [...]
“அன்பின் வழியினிலே”
நேவிஸ் பிலிப் கவி இல(563) அன்பின் வழியில் நடந்திட்டால் ஆயிரம் நன்மை கூடி வரும் இறையருள் ஒன்றே நாடி நின்றால் [...]
முடிவில்லாத் தொடக்கம் 84
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 05-02-2026 வாழ்வு முடிவில்லாத் தொடர்ச்சி வலிகளும் இன்பமும் வளைந்து நெளிந்து வட்டமிடும் சுழற்சி முடிந்து விட்டதென [...]
