” சுதந்திரம் “
ரஜனி அன்ரன் (B.A) ” சுதந்திரம் ” 05.02.2026
சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை
அதுவே ஒவ்வொரு மனிதனதும் பிறப்புரிமை
சுதந்திரமென்பது வெறும் உரிமையல்ல
அதுஒவ்வொரு தனிமனிதனின் பொறுப்புரிமை
தடையின்றி வாழும் முழுமையான உரிமையே
உண்மையான சுதந்திரம் !
தலை நிமிர்ந்து நடந்து
தவறுகளைத் தட்டிக் கேட்டு
தனிமனித எண்ணம் சிந்தனை செயற்பாடுகளோடு
பிறரின் உரிமையையும் மதித்து
ஒளியாய் வாழ்தலே சுதந்திரம் !
தேசம் பெற்ற சுதந்திரம்
நேசமான வரலாற்றின் பக்கமென்றால்
மனம்பெறும் சுதந்திரம் மகத்துவமானதே
சுதந்திரம் என்பது காற்றைப் போன்றதே
நாம்அனுபவிக்கும் இந்த சுதந்திரம்
பலரின் இரத்தத்தாலும் வியர்வையாலும் கிடைத்ததுவே
அதனைப்போற்றிப் பாதுகாப்போம் !
Author: ரஜனி அன்ரன்
Related Post
உயிரான உறவே…
வசந்தா ஜெகதீசன் உயிரான உறவே… வெற்றி மிகு வாழ்வில் வீறு கொள்ளும் சிந்தை பற்றியே படர்கின்ற பாதையின் செதுக்கல் பாசமுடன் [...]
புரிய முயலாதே 1
நேற்று என்பது நினைவோடு மட்டும் நாளை என்பது கற்பனையாக சொட்டும் உண்மை மட்டும் இன்று நிகழ்கின்றது சுகம் வந்தால் நிரந்தரமென [...]
௨யிரான காதல்
வஜிதா முஹம்மட் ௨யிரான காதல் க௫வுக்குள் ௨யிராகி க௫ணைக்குள் நிஜமாகி வலிகளை வரமாக்கி ௨யி௫க்குள் ௨றவு தாயே மூச்சு முட்டும் [...]
